கோதுமை அடை பிரதமன் : Wheat Adai Pradhaman
சுவையான, சத்துள்ள கேரள நாட்டு உணவு வகை. சப்பாத்தியும், சப்ஜியும் சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு இது ஒரு அருமையான மற்றும் வித்தியாசமான உணவு வகை
சுவையான, சத்துள்ள கேரள நாட்டு உணவு வகை. சப்பாத்தியும், சப்ஜியும் சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு இது ஒரு அருமையான மற்றும் வித்தியாசமான உணவு வகை
தேவையான பொருட்கள்:
அடை செய்வதற்கு :
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்
பிரதமன் செய்வதற்கு:
கொழுப்பு நீக்க பட்ட பால் -2 கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய்-2 (தூளக்கபட்டது )
முந்திரி, அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை - 25 கிராம்
செய்முறை:
- கோதுமை மாவை தண்ணீர் மற்றும் உப்பு கலந்து உருண்டைகளாக பிசைந்து கொள்ளவும்.
- உருண்டைகளை சப்பாத்திகளாக தேய்த்து சிறிய சதுரங்களாக நறுக்கவும்.
- இந்த அடையை கொதிக்கும் நீரில் இட்டு, வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி தண்ணீரை வடிகட்டவும் .
- வெல்லத்தை கரைத்து தனியாக பாகு எடுத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில், கொழுப்பு நீக்கப்பட்ட பாலை காயவைத்து அதில் வடிகட்டிய அடையை சேர்த்து சிறிது நேரம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும். .
- கடைசியாக பாகு எடுத்த வெல்லத்தை பாலில் சேர்த்து, ஏலக்காய் பொடியை கலக்கவும்.(பாலும், வெல்லபாகும் மிகவும் சூடாக இல்லாமல் பார்த்துகொள்ளவும்)
- முந்திரி,பாதாம்,அக்ரூட் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து பரிமாறவும்.
- சூடாகவும் பரிமாறலாம், குளிர வைத்தும் பரிமாறலாம்
- கோதுமை மாவு - சிக்கலான கார்போஹைட்ரேட்
- வெல்லம் - சர்க்கரையில் இருப்பது போல, ரசாயனங்கள் அற்றவை
- கொழுப்பு நீக்க பட்ட பால் -புரத சத்து நிறைந்தது
omg its awesome dhivya bookmarked it :) wll prepare soon
ReplyDeleteOk Aparna.... Let me know your comments:)
Delete